75-வது சுதந்திர தின விழா: மாநிலங்களில் முதல்-மந்திரிகள் கொடியேற்றினர்


75-வது சுதந்திர தின விழா: மாநிலங்களில் முதல்-மந்திரிகள் கொடியேற்றினர்
x
தினத்தந்தி 15 Aug 2021 6:26 AM GMT (Updated: 15 Aug 2021 6:26 AM GMT)

75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி அனைத்து மாநிலங்களில் முதல்-மந்திரிகள் கொடியேற்றினர்.

புதுடெல்லி, 

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் இருந்து நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் ஆகி உள்ளன. 75-வது சுதந்திர தினம், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை மூவர்ணக்கொடியேற்றி வைத்தார். அதன் பின்னர் மாநில தலைநகரங்களில் நடைபெற்ற விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கொடி ஏற்றிவைத்தனர்.

* சுதந்திர தினத்தையொட்டி பீகார் மாநிலத்தில் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கொடி ஏற்றினார்.

* மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சுதந்திர தினத்தையொட்டி கொல்கத்தாவில் உள்ள சிவப்பு சாலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

* தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

* ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

* கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

* சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் ராய்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

* மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள மாநில செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Next Story