காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்


காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்டது  ஏர் இந்தியா விமானம்
x
தினத்தந்தி 15 Aug 2021 12:56 PM GMT (Updated: 2021-08-15T18:26:17+05:30)

இந்தியர்களை அழைத்து வர ஆப்கானிஸ்தான் சென்ற ஏர் இந்தியா விமானம் 129 பயணிகளுடன் இந்தியாவிற்கு புறப்பட்டது.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர காபூல் விரைந்தது ஏர் இந்தியா விமானம். இந்த விமானம் அங்கு பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், என அனைவரையும் அழைத்து கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று இரவே தாயகம் திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதற்கட்டமாக காபூலில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story