75 ஆவது சுதந்திர தின விழா: வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி


75 ஆவது சுதந்திர தின விழா: வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Aug 2021 2:30 PM GMT (Updated: 2021-08-15T20:00:51+05:30)

75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய நடனங்களுடன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் வாகா நுழைவு வாயில் அமைந்துள்ளது. இது இருநாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் போக்குவரத்து தொடர்பு ஏற்படுத்தும் முக்கிய நுழைவு வாயிலாக திகழ்கிறது.

இந்நிலையில் இன்று 75-வது சுதந்திரதினத்தையொட்டி வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற்ற போது  பாரம்பரிய நடனங்களுடன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மிடுக்கான நடை நடந்து தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.

Next Story