ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்


ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்
x
தினத்தந்தி 15 Aug 2021 2:50 PM GMT (Updated: 2021-08-15T20:20:36+05:30)

தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானை விட்டுவிட்டு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறி வரும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு காபூலுக்குள் மீண்டும் தலிபான்கள் நுழைந்துள்ளனர். நான்கு பக்கங்களில் இருந்து தலைநகருக்குள் நுழைந்து காபூலை கைப்பற்றினர். 

இந்நிலையில் ஐ.நா., அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் தங்களின் தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் திரும்ப அழைத்துக் கொண்டது. இந்தியாவிற்கான கடைசி ஏர் இந்தியா விமானம் ஏஐ244 129 பயணிகளுடன்  காபூலிலிருந்து தற்போது புறப்பட்டு  டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது. 

தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந்தியாவிலிருந்து வாரத்தில் மூன்று நாட்கள் காபூலுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம், இனி இயக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Next Story