தேசிய செய்திகள்

அறிவிப்புகளை நிறைவேற்றுவது இல்லை, 7 ஆண்டுகளாக மோடி ஒரே பேச்சை பேசுகிறார்; காங்கிரஸ் விமர்சனம் + "||" + PM Modi giving same speech for 7 years, nothing implemented on ground: Congress

அறிவிப்புகளை நிறைவேற்றுவது இல்லை, 7 ஆண்டுகளாக மோடி ஒரே பேச்சை பேசுகிறார்; காங்கிரஸ் விமர்சனம்

அறிவிப்புகளை நிறைவேற்றுவது இல்லை, 7 ஆண்டுகளாக மோடி ஒரே பேச்சை பேசுகிறார்; காங்கிரஸ் விமர்சனம்
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் 7 ஆண்டுகளாக ஒரே பேச்சையே பேசுகிறார். ஆனால் அறிவிப்புகளை நிறைவேற்றுவது இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
அறிவிப்பு வெளியீடு

பிரதமர் மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றினார். அதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே பேச்சையே பேசி வருகிறார். அதைத் தான் மக்கள் கேட்டு வருகிறார்கள். சிறு விவசாயிகள் போன்ற ஒடுக்கப்பட்டோருக்காக எதுவுமே செய்யவில்லை. திட்டங்கள் பற்றிய அறிவிப்பை மட்டுமே வெளியிடுகிறார். அவை ஒருபோதும் களத்தில் நிறைவேற்றப்படுவது இல்லை. அவர் எவ்வளவோ விஷயங்களை பேசுகிறார். ஆனால் அவற்றை கடைபிடிப்பது இல்லை. 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளுக்கு அழிவு ஏற்படுத்தி விட்டார்.

காங்கிரசை விமர்சிப்பதால் நாடு முன்னேறாது
மேலும், வளர்ச்சி, சிறு விவசாயிகள் பிரச்சினைகளில் முந்தைய அரசுகளை மோடி விமர்சித்து வருகிறார். செங்கோட்டையில் இருந்தபடி காங்கிரஸ் அரசை விமர்சிப்பதால், நாடு முன்னேறி விடாது.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ நீர்ப்பாசன திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மன்மோகன்சிங், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

உள்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு பற்றி மோடி அறிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே அறிவிப்பை அவர் வெளியிட்டார். அந்த எண்ணிக்கையை மட்டுமாவது மாற்றி இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 10 கிலோ அரிசி - டி.கே.சிவக்குமார் பேச்சு
கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஏழைகளுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
2. காங்கிரஸ் தலைவர் யார்? கட்சியின் காரிய கமிட்டி இன்று கூடுகிறது
2019-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
3. ‘கதிசக்தி’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கான ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான ‘கதிசக்தி’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
4. பாக். ஆதரவு பயங்கரவாதத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - காஷ்மீர் காங். தலைவர்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை தடுக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
5. வரும் 16 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.