காங்கிரஸ் அரசை விமர்சிப்பதால், நாடு முன்னேறி விடாது - எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே


காங்கிரஸ் அரசை விமர்சிப்பதால், நாடு முன்னேறி விடாது - எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
x
தினத்தந்தி 15 Aug 2021 8:55 PM GMT (Updated: 2021-08-16T02:25:39+05:30)

செங்கோட்டையில் இருந்தபடி காங்கிரஸ் அரசை விமர்சிப்பதால், நாடு முன்னேறி விடாது என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் 7 ஆண்டுகளாக ஒரே பேச்சையே பேசுகிறார். ஆனால் அறிவிப்புகளை நிறைவேற்றுவது இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பிரதமர் மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றினார். அதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே பேச்சையே பேசி வருகிறார். அதைத்தான் மக்கள் கேட்டு வருகிறார்கள். சிறு விவசாயிகள் போன்ற ஒடுக்கப்பட்டோருக்காக எதுவுமே செய்யவில்லை.

திட்டங்கள் பற்றிய அறிவிப்பை மட்டுமே வெளியிடுகிறார். அவை ஒருபோதும் களத்தில் நிறைவேற்றப்படுவது இல்லை. அவர் எவ்வளவோ விஷயங்களை பேசுகிறார். ஆனால் அவற்றை கடைபிடிப்பது இல்லை. 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளுக்கு அழிவு ஏற்படுத்தி விட்டார்.

மேலும், வளர்ச்சி, சிறு விவசாயிகள் பிரச்சினைகளில் முந்தைய அரசுகளை மோடி விமர்சித்து வருகிறார். செங்கோட்டையில் இருந்தபடி காங்கிரஸ் அரசை விமர்சிப்பதால், நாடு முன்னேறி விடாது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ நீர்ப்பாசன திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மன்மோகன்சிங், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story