ரக்ஷா பந்தனை முன்னிட்டு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.1,000; உத்தரகாண்ட் முதல் மந்திரி உத்தரவு


ரக்ஷா பந்தனை முன்னிட்டு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.1,000; உத்தரகாண்ட் முதல் மந்திரி உத்தரவு
x
தினத்தந்தி 17 Aug 2021 8:13 PM GMT (Updated: 2021-08-18T01:43:14+05:30)

உத்தரகாண்டில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.1,000 வழங்க முதல் மந்திரி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
டேராடூன்,

நாட்டில் கொரோனா பாதிப்பு காலத்தில் முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் சேவை குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.  இதேபோன்று ஆஷா பணியாளர்களும் கொரோனா கால பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சுகாதாரம் சார்ந்த பணியில் ஈடுபடும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி வெளியிட்டுள்ள உத்தரவில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
Next Story