ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவி தாஹியாவின் பெயரை டெல்லி அரசு பள்ளிக்கு சூட்டி கவுரவம்


ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவி தாஹியாவின் பெயரை டெல்லி அரசு பள்ளிக்கு சூட்டி கவுரவம்
x
தினத்தந்தி 17 Aug 2021 9:56 PM GMT (Updated: 2021-08-18T03:26:35+05:30)

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவி தாஹியாவின் பெயரை அவர் படித்த பள்ளிக்கு டெல்லி அரசு சூட்டியுள்ளது.புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ரவி தாஹியா டெல்லியின் ராஜ்கியா பால் வித்யாலயாவில் படித்து உள்ளார்.

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, தனது கடின உழைப்பின் வழியே டெல்லி அரசு பள்ளி மாணவர் ஒருவர் தேசத்திற்கான அடையாள இளைஞராகியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு ரவி தாஹியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் படித்த பள்ளியின் ராஜ்கியா பால் வித்யாலயா என்ற பெயரானது, ரவி தாஹியா பால் வித்யாலயா  என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது என்று டெல்லி அரசு அறிவித்து உள்ளது.


Next Story