தேசிய செய்திகள்

2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Raj Kundra granted interim protection from arrest in connection with 2020 pornography case

2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை கைது செய்ய ஐகோர்ட்டு இடை கால தடை விதித்துள்ளது.
ஜாமீன் மனு
மாடல் அழகிகளை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச படம் எடுத்து மொபைல் ஆப் மூலமாக வெளியிட்ட வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர்.தற்போது சிறையில் இருக்கும் அவர் முன்னதாக 2020-ம் ஆண்டு ஆபாச படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதாக மும்பை சைபர் பிரிவு போலீசார் பதிவு செய்த மற்றொரு வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழக்குமாறு ஐகோர்ட்டில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர், சைபர் போலீசார் பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே தனக்கும் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கவேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.கே.ஷிண்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

போலீசாருக்கு உத்தரவு
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பிஜக்தா ஷிண்டே, “இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவின் பங்கு மற்ற குற்றவாளிகளில் இருந்து வேறுபட்டது. இது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிபதி, ராஜ் குந்த்ராவின் முன்ஜாமீன் மனு குறித்து வரும் 25-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் அதுவரை இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஷெர்லின் சோப்ரா மீது ராஜ் குந்த்ரா- ஷில்பா ஷெட்டி ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு
ஷெர்லின் சோப்ரா அக்டோபர் 14 அன்று ஜுஹு போலீஸ் நிலையத்தில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் புகார் அளித்து உள்ளார்.
2. பாலியல் வன்கொடுமை : நடிகை ஷில்பா ஷெட்டி -ராஜ் குந்த்ரா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்
ஷெர்லின் சோப்ரா ஏப்ரல் 20, 2021 அன்று ஜுஹு காவல் நிலையத்தில் ஆஜராகி ராஜ் குந்த்ராவுக்கு எதிரான தனது வழக்கை வாபஸ் பெற்று இருந்தார்.
3. ஷில்பா ஷெட்டியின் கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள் ; ரூ.9 கோடிக்கு விற்க திட்டம்
ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் செல்போனிலிருந்து 119 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. கணவர் மீதான ஆபாச பட வழக்கு: கருத்து சொல்வதை தவிர்க்கிறேன் -ஷில்பா ஷெட்டி முதல் அறிக்கை
ஷில்பா ஷெட்டி தன்னைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதாக ஊடகங்கள் மீதுமும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
5. ஆபாச பட விவகாரம்: ஆண்கள் தவறுகளுக்கு பெண்களைக் குறை சொல்வதா...? ஷகிலா பயோபிக் நடிகை கோபம்
இந்திப் பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹன்சல் மேத்தா, ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.