சிவசேனாவுடன் கூட்டணியில் இல்லாததால் பா.ஜனதாவை விரிவுப்படுத்த பொன்னான வாய்ப்பு: தேவேந்திர பட்னாவிஸ்


சிவசேனாவுடன் கூட்டணியில் இல்லாததால் பா.ஜனதாவை விரிவுப்படுத்த பொன்னான வாய்ப்பு: தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 20 Aug 2021 2:42 AM GMT (Updated: 20 Aug 2021 2:42 AM GMT)

சிவசேனாவுடன் கூட்டணியில் இல்லாததால் பா.ஜனதாவை விரிவுப்படுத்த பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

கட்சியில் சேர்ந்தார்
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் முன்னிலையில் அக்கட்சியில் புனே மாவட்டத்தை சேர்ந்த சிவசேனா தலைவர் ஆஷா புசாகே சேர்ந்தார். அவரை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றார். 

நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

பொன்னான வாய்ப்பு
சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்தபோது பா.ஜனதாவால் தனது தளத்தை விரிப்படுத்த முடியவில்லை. தற்போது நமது உறவை சிவசேனா முறித்து ஆட்சியமைத்து உள்ளது. இதன் மூலம் பா.ஜனதாவின் தளத்தை விரிவுப்படுத்த முடிகிறது. கட்சியை மேலும் விரிவுப்படுத்த இது நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. அடுத்த (2024) சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும். ஆட்சியில் இருக்கும் 3 கட்சிகளும் மூச்சு திணறலை உணருகின்றன. இந்தநிலையில் ஆஷா புசாகே சிவசேனாவில் இருந்து விலகி பா.ஜனதாவிற்கு வந்தது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story