தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை + "||" + Encounter in Kashmir; 2 terrorists of Hizbul Mujahideen movement shot dead

காஷ்மீர் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீர் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபோராவில் பாம்பூர் பகுதியில் க்ரூ என்ற இடத்தில் போலீசர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் இன்று அதிகாலையில் ஈடுபட்டனர்.

இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த மோதலில் ஒரு பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது.  இந்த என்கவுண்ட்டரில் மற்றொரு பயங்கரவாதியையும் படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.  இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறும்போது, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் நடப்பு ஆண்டு ஜூலை 23ந்தேதி பாஸ்டுனா பகுதியில் அமைந்த அரசு பள்ளி ஒன்றின் பணியாளரை கொலை செய்ததில் தொடர்புடையவன்.  க்ரூ பகுதியை சேர்ந்த முசைப் முஷ்டாக் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழக மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி; அமைச்சர் பேட்டி
தமிழக மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.
2. காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் தேடப்பட்டு வந்த ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.
3. என்கவுன்டரில் கொள்ளையன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்
ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களில் ஒருவன் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
4. கொரோனா தடுப்பூசி: உலகம் முழுமைக்கும் வழி காட்டிய இந்தியா; பிரதமர் மோடி
பெரிய அளவில் எப்படி தடுப்பூசி செலுத்துவது என உலக நாடுகளுக்கு இந்தியா வழி காட்டியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. தமிழகத்தில் கோவில்கள் படிப்படியாக முழுமையாக திறக்கப்படும்: அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி
தமிழகத்தில் கோவில்கள் படிப்படியாக முழுமையாக திறக்கப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.