குஜராத்; சோம்நாத் சிவபார்வதி கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல்


குஜராத்; சோம்நாத் சிவபார்வதி கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
x
தினத்தந்தி 20 Aug 2021 7:28 AM GMT (Updated: 20 Aug 2021 7:28 AM GMT)

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் உள்ள சிவபார்வதி கோயிலுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் உள்ள சிவபார்வதி கோயிலுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும் சோம்நாத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். சோம்நாத்தில் ரூ.30 கோடி மதிப்பில் சிவபார்வதி கோயில் சோம்பரா சலத்ஸ் முறையில் கட்டப்பட உள்ளது.

இந்த திட்டங்களில் சோம்நாத் ப்ரோமெனேட், சோமநாத் கண்காட்சி மையம், பார்வதி கோவில் மற்றும் பழைய சோமநாத்தின் புனரமைக்கப்பட்ட கோவில் வளாகம் ஆகியவை அடங்கும்.

அதன் பின்னர் பிரதமர் மோடி கூறுகையில், 

ஆன்மீக சுற்றுலாவை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் கடந்த காலத்தைப் பற்றிய அறிவை இளைஞர்கள் அறிந்து கொள்வார்கள். பயத்தால் நம்பிக்கையை ஒடுக்க முடியாது என்பதை கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி, குஜராத் முதல்-மந்திரி  விஜய் ரூபானி மற்றும் துணை முதல்-மந்திரி நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story