நாட்டில் இதுவரை 57.22 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்: மத்திய அரசு


நாட்டில் இதுவரை 57.22 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்:  மத்திய அரசு
x
தினத்தந்தி 20 Aug 2021 7:57 AM GMT (Updated: 20 Aug 2021 7:57 AM GMT)

நாட்டில் இதுவரை மொத்தம் 57.22 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் நாடு முழுவதும் பரவலாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.  இந்நிலையில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் பல்வேறு மாநிலங்களில் குறைந்து ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.  நேற்று ஒரே நாளில் 18,86,271 கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது.

இதன்படி, நேற்று வரை (ஆகஸ்டு 19ந்தேதி) நாடு முழுவதும் மொத்தம் 50 கோடியே 26 லட்சத்து 99 ஆயிரத்து 702 கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 54,71,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.  இன்று காலை 7 மணிவரை மொத்தம் 57,22,81,488 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.


Next Story