தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம் + "||" + President Ram Nath Kovind on four-day UP visit from August 26, to attend Sainik School event in Lucknow

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 26-ந் தேதி முதல் 4 நாட்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர், லக்னோவில் உள்ள ராஜ்பவனில் தங்குவார்.
ஆகஸ்டு 26-ந் தேதி லக்னோ அம்பேத்கர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பார்.27-ந் தேதி, சைனிக் பள்ளி வைர விழாவிலும், 28-ந் தேதி கோரக்பூரில் நடைபெறும் முதல் ஆயுஷ் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்துகொள்வார்.29-ந் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கு முதல் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் செல்வார். அங்கு வழிபாடு மேற்கொள்ளும் அவர், அன்றைய தினமே டெல்லி திரும்புவார்.

ஜனாதிபதி பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளிலும் மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொள்வர்.ஜனாதிபதி ராம்நாத் செல்லும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு ஒத்திகைகள் துவங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. இரண்டு நாள் பயணமாக லடாக் செல்கிறார் ராம்நாத் கோவிந்த்
இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் செல்கிறாா்.
2. நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது அவசியம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது அவசியம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
3. ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வக்கீல்கள் முன்வர வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்
ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க மூத்த வக்கீல்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
4. மாநிலத்தின் பொன்விழாவையொட்டி இமாசலபிரதேச சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
இமாசலபிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார்.
5. கொரோனா தொற்று முடிவடையவில்லை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி வலியுறுத்தல்
கொரோனா பெருந்தொற்று முடிவடையாததால் நாட்டு மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.