பெங்களூரு-உப்பள்ளி மார்க்கமாக இயங்கும் 3 ரெயில்களின் நேரம் மாற்றம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்


பெங்களூரு-உப்பள்ளி மார்க்கமாக இயங்கும் 3 ரெயில்களின் நேரம் மாற்றம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2021 5:27 PM GMT (Updated: 22 Aug 2021 5:27 PM GMT)

பெங்களூரு-உப்பள்ளி மார்க்கமாக இயங்கும் 3 ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

உப்பள்ளி,

பெங்களூரு-உப்பள்ளி மார்க்கமாக இயங்கும் 3 ரெயில்களின் நேரம் வருகிற 1-ந்தேதியில் முதல் மாற்றப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கே.எஸ்.ஆர். பெங்களூரு- உப்பள்ளி ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 02079) பெங்களூருவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.45 மணிக்கு உப்பள்ளியை சென்றடைந்தது. இந்த ெரயிலின் நேரம் மாற்றப்பட்டு பெங்களூருவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 1 மணிக்கு உப்பள்ளியை ெசன்றடையும்.

மறுமார்க்கமாக உப்பள்ளி-கே.எஸ்.ஆர். பெங்களூரு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (02080) உப்பள்ளியில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவுக்கு இரவு 9.50 மணிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நேரம் மாற்றப்பட்டு, உப்பள்ளியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவுக்கு இரவு 8.55 மணிக்கு சென்றடைகிறது. வருகிற 1-ந்தேதி முதல் புதிய நேரத்தில் இந்த ரெயில் இயங்கும்.

இதேபோல, பெங்களூரு யஸ்வந்தபுரம்-வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (07339) யஸ்வந்தபுரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு வாஸ்கோடகாமாவுக்கு சென்று வந்தது. இந்த ரெயிலின் நேரம் மாற்றப்பட்டு, யஸ்வந்தபுரத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு வாஸ்கோவை சென்றடையும்.

மறுமார்க்கமாக வாஸ்கோடகாமா-பெங்களூரு யஸ்வந்தபுரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (07340) புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் மாற்றப்படவில்லை. இடைப்பட்ட ரெயில் நிலையங்களில் வரும், புறப்படும் நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றமும் வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் கே.எஸ்.ஆர். பெங்களூரு-தார்வார் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (02725) பெங்களூருவில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு தார்வாருக்கு சென்று வந்தது. இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு தார்வாரை சென்றடையும். இந்த நேர மாற்றம் வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Next Story