மேற்கு வங்காளத்தில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட தலைப்பாகை தயாரிப்பாளர்கள்


மேற்கு வங்காளத்தில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட தலைப்பாகை தயாரிப்பாளர்கள்
x
தினத்தந்தி 23 Aug 2021 1:50 AM GMT (Updated: 23 Aug 2021 1:50 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான்களால் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம் ஒட்டுமொத்த உலகையும் பாதித்து உள்ளது. இதில் சிலர் நேரடியாகவும், சிலர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் மேற்கு வங்காள தலைப்பாகை தயாரிப்பாளர்களின் நிலைமை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

அங்குள்ள பங்குரா மாவட்டத்துக்கு உட்பட்ட சோனாமுக்கி பகுதியில் தயாராகும் தலைப்பாகைகள் பெருமளவில் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. எனவே இதை நம்பி 150-க்கு மேற்பட்ட தலைப்பாகை தயாரிப்பாளர்கள் அங்கு பணி செய்து வருகின்றனர். ஒருவர் மாதமொன்றுக்கு 20 முதல் 50 தலைப்பாகை வரை செய்ய முடியும். இது ரூ.350 முதல் ரூ.3,500 விற்பனையாவதால் அவர்களது வாழ்வாதாரம் ஓரளவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானில் அரசியல் குழப்பம் மற்றும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த தலைப்பாகைகள் ஏற்றுமதி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

நாட்டில் அமல்படுத்தப்பட்டு இருந்த கொரோனா பொதுமுடக்கத்தால் தங்கள் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஆப்கன் நிலவரமும் சேர்ந்து மொத்தமாக தங்கள் வாழ்வாதாரம் இழந்திருப்பதாக அவர்கள் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர்.

Next Story