தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்பு; மத்திய அரசுக்கு கேரள முதல்-மந்திரி நன்றி + "||" + Keralites among evacuees from Afghanistan, breathe sigh of relief

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்பு; மத்திய அரசுக்கு கேரள முதல்-மந்திரி நன்றி

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்பு; மத்திய அரசுக்கு கேரள முதல்-மந்திரி நன்றி
தலீபான்கள் கைவசப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள கேரள மாநிலத்தவர்கள் உள்ளிட்ட இந்திய மக்களை மீட்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதம மந்திரி அலுவலகத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ததற்கு நன்றி’ என்று கூறியுள்ளார். 

மேலும், ஆப்கானிஸ்தான் தொடர்பாக உதவி வேண்டும் கேரளாக்காரர்கள், வௌிநாடுவாழ் கேரள மக்களுக்கான ‘நோர்க்கா ரூட்ஸ்’ பிரிவையோ, வெளியுறவு அமைச்சகத்தின் ஆப்கானிஸ்தானுக்கான 24 மணி நேர சிறப்பு பிரிவையோ தொடர்புகொள்ளலாம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினியால் 8 சிறுவர்கள் சாவு
ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினியால் 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் டெல்லி திரும்பினார்
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் பன்ஸ்ரீலால் அரிண்டா விடுவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.
3. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு இல்லை: தலீபான்கள்
பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் எந்த ஒத்துழைப்பும் இருக்காது என செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறினார்.
4. ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் 20 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் 20 பேரை தலீபான்கள் சுட்டுக்கொன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐ.நா. திட்டம்
ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட ஐ.நா. திட்டமிட்டு வருகிறது.