புதுச்சேரியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Aug 2021 9:28 AM GMT (Updated: 23 Aug 2021 9:28 AM GMT)

புதுச்சேரியில் வருகிற 26ஆம் தேதி மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் முனுசாமி வெளியிட்டிருந்தார். இதற்கிடையே புதுவை அரசின் ரூ.10 ஆயிரத்து 100 கோடி மதிப்பில் பட்ஜெட்டுக்கான திட்டவரையறை தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. 
இதைத்தொடர்ந்து புதுவை அரசின் பட்ஜெட் தொகையான ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. 

இந்நிலையில் புதுச்சேரியில் வருகிற 26ஆம் தேதி மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசின் முதல் கூட்டமாக இது அமைகிறது. அன்றைய தினம் காலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கான ஆயத்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story