மே.வங்காளத்தில் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும்; மம்தா பானர்ஜி வலியுறுத்தல்


மே.வங்காளத்தில் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும்; மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Aug 2021 12:34 PM GMT (Updated: 2021-08-23T18:05:41+05:30)

மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மம்தா பானர்ஜி  இது பற்றி கூறுகையில், 

“ மேற்கு வங்கத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் வாக்களித்து பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர்.  மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் தங்கள் சபை உறுப்பினர்களை தேர்வு செய்யும் உரிமையும் இருக்கிறது.  ஆகவே,  மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்காமல், இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் கண்டிப்பாக அறிவிக்க வேண்டும்” என்றார். 

Next Story