மராட்டியத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 103-ஆக உயர்வு


மராட்டியத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 103-ஆக உயர்வு
x

மராட்டியத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 103-ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

சீனாவின் வுகான் மாகாணத்தில் முதல்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, டெல்டா வகை கொரோனா வைரஸ் பிற வகைகளை காட்டிலும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மராட்டியத்தில் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. 

இந்த நிலையில், மராட்டியத்தில் இன்று மேலும் 27 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 103- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story