உத்தரபிரதேசத்தில் 6 சாலைகளுக்கு கல்யாண் சிங் பெயர் - மாநில அரசு அறிவிப்பு


உத்தரபிரதேசத்தில் 6 சாலைகளுக்கு கல்யாண் சிங் பெயர் - மாநில அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 5:54 PM GMT (Updated: 23 Aug 2021 5:54 PM GMT)

உத்தரபிரதேசத்தில் 6 சாலைகளுக்கு கல்யாண் சிங் பெயர் சூட்டப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கல்யாண் சிங், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந்தேதி இரவு காலமானார். மாநிலத்தில் பா.ஜனதா கட்சியை கடந்த 1990-களில் ஆட்சிக்கட்டிலில் ஏற்றியதில் முக்கிய பங்கு வகித்த கல்யாண் சிங்குக்கு சிறந்த மரியாதை அளிக்க கட்சித்தலைமையும், மாநிலத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா அரசும் முடிவு செய்துள்ளன.

அதன்படி மாநிலத்தில் 6 மாவட்டங்களில் தலா ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என அரசு அறிவித்து உள்ளது. குறிப்பாக அயோத்தி, லக்னோ, அலிகார், இடா, புலந்த்சாகர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய 6 மாவட்டங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தலா ஒரு நெடுஞ்சாலைக்கு கல்யாண் சிங்கின் பெயர் சூட்டப்படுகிறது.

இதற்கான பரிந்துரையை தயாரிக்கும் பணிகளை மாநில பொதுப்பணித்துறை தொடங்கி உள்ளது.

Next Story