சுதந்திர போராட்ட வீரர்களில் 387 பேரை நீக்கும் முடிவு வரலாற்று அநீதி; கேரள எதிர்க்கட்சி தலைவர்


சுதந்திர போராட்ட வீரர்களில் 387 பேரை நீக்கும் முடிவு வரலாற்று அநீதி; கேரள எதிர்க்கட்சி தலைவர்
x
தினத்தந்தி 24 Aug 2021 3:12 AM GMT (Updated: 24 Aug 2021 3:12 AM GMT)

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து 387 பேரை நீக்கும் மத்திய அரசின் முடிவு வரலாற்றுக்கு இழைக்கும் அநீதி என கேரள எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.




திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 1921ம் ஆண்டில் மலபார் நகரில் நடந்த இங்கிலாந்து காலனி அரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.  எனினும், இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து மத்திய அரசு சார்பில் 387 பேரை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இந்நிலையில், கேரள எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, வரலாற்றை திரிக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.  சர்வாதிகாரி போன்று, அவராகவே வரலாறை உருவாக்க முயற்சிக்கிறார் என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


Next Story