நாரயண் ரானே கருத்தில் உடன்பாடு இல்லை; மராட்டிய பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்


நாரயண் ரானே கருத்தில் உடன்பாடு இல்லை;  மராட்டிய பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 24 Aug 2021 9:14 AM GMT (Updated: 24 Aug 2021 9:14 AM GMT)

உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய மந்திரி நாராயன் ரானா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் பாஜக சார்பில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாஜக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி நாராயன் ரானா பங்கேற்றார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி நாராயன் ரானா, மராட்டிய முதல் மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதின நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு எப்போழுது என தெரியாமல் தனது உரையை நிறுத்தி அருகில் இருந்த உதவியாளர்களிடம் கேட்டுள்ளார்.  முதல்-அமைச்சருக்கு நாடு சுதந்திரதினம் பெற்ற ஆண்டு எப்போழுது என்பது தெரியாதது மிகவும் அவமானகரமானது. நான் அப்போது அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்’ என்றார்.

உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய மந்திரி நாராயன் ரானா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  நாராயன் ரானாவின் பேச்சை கண்டித்து மராட்டிய மாநிலம் முழுவதும் சிவசேனா கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், மராட்டிய பாஜகவின் முக்கிய தலைவரும் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியுமான தேவேந்திர பட்ன்வாவிஸ், நாராயண் ரானே கருத்தில் உடன்பாடு இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால் தனிநபராகவும் கட்சி ரீதியாகவும் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம். ஷார்ஜில் உஸ்மானி பாரத மாதாவை இழிவுபடுத்தினார். ஆனால் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் (மாநில அரசு) நாராயண் ரானேவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்” எனத் தெரிவித்தார். 


Next Story