தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 27 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு + "||" + Delta Plus cases of the coronavirus in Maharashtra has risen to 103

மராட்டியத்தில் மேலும் 27 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு

மராட்டியத்தில் மேலும் 27 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் டெல்டா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை,

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் போது வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகைகளில் கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது. இதில் டெல்டா வகை கொரோனா மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரசாக உள்ளது. இந்த வைரஸ் கொரோனாவின் 3-வது அலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டெல்டா வைரஸ் பல்வேறு மாநிலங்களில் டெல்டா வைரஸ் பரவி உள்ளது. அந்த வகையில் மராட்டிய மாநிலத்திலும் டெல்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மராட்டியத்தில் மேலும் 27 பேருக்கு புதிதாக டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது. இதனால், மராட்டியத்தில் டெல்டா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன - புதிய ஆய்வுத்தகவல்
டெல்டா போன்ற புதிய வகை வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளன என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2. டெல்டா வைரசால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் அபாயம் அதிகரிப்பு - இங்கிலாந்து ஆய்வு முடிவு
டெல்டா வைரசால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் அபாயம் அதிகமாக உள்ளது என இங்கிலாந்து ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. 18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவலால் அலறுகிறது, சீனா
18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவியதால் சீனா அலறுகிறது.
4. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில் இருந்து பாதுகாப்பு -விஞ்ஞானிகள் தகவல்
2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.