தேசிய செய்திகள்

பீகாரில் 11 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் + "||" + Panchayat polls in Bihar will be held in a total of 11 phases

பீகாரில் 11 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல்

பீகாரில் 11 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல்
பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் 11 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாட்னா,

பீகார் மாநிலத்தில் வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கமிட்டி உறுப்பினர், மாவட்ட கவுன்சில் உறுப்பினர் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் உள்ள 2,59,260 பதவிகளுக்கு நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில், பீகார் பஞ்சாயத்து தேர்தல் 11 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறுகிறது. 

இறுதிகட்ட தேர்தல் டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு கட்ட தேர்தல் நடந்து முடிந்த இரண்டாவது நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி
பீகாரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
2. பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு- மொத்த பலி எண்ணிக்கை 40- ஆக உயர்வு
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 40- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. பீகார்: கள்ளச்சாராய விருந்து - 5 பேர் உயிரிழப்பு
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. பீகார் குண்டு வெடிப்பு வழக்கு: 9 பேர் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ. கோர்ட்டு தீர்ப்பு
பீகாரில் 2013-ம் ஆண்டு மோடி பொதுக்கூட்ட மைதானத்தில் குண்டு வெடித்த வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
5. பீகார் சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழா - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு..!
பீகார் மாநில சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.