தேசிய செய்திகள்

எம்.பியால் பாலியால் பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு + "||" + Raped by BSP MP woman who set herself on fire dies

எம்.பியால் பாலியால் பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு

எம்.பியால் பாலியால் பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியான அதுல் ராய் மீது இளம்பெண் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசாரிடம் சரண் அடைந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியால் பலாத்காரம் செய்யப்பட்டதாக இறுதி வாக்குமூலம் அளித்த இளம் பெண்( வயது 24) சுப்ரீம் கோர்ட்  வாயில் அருகே காதலனுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

உத்தரப்பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி  எம்.பியான அதுல் ராய் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து  போலீசாரிடம் சரண் அடைந்த அதுல் ராய்  சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறையில் இருக்கும் எம்.பிக்கு  சலுகைகள் அளித்துவருவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறி வந்தார். இந்த நிலையில்  கடந்த 16ந் தேதி திடீரென டெல்லி சுப்ரீம் கோர்ட்  வாயில் அருகே தனது காதலனுடன் தீக்குளித்தார். உயிருக்குப் போராடி வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது காதலர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

தீக்குளிப்பதற்கு முன், அவர்கள் ஒரு பேஸ்புக் லைவ் வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.அதில் அந்த பெண் எம்.பி.அதுல் ராய், மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நீதிபதி ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளையின் கோரிக்கை நிராகரிப்பு - சுப்ரீம் கோர்ட்டு
வகாரத்தில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
2. சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி செய்திகள் -சுப்ரீம் கோர்ட் கவலை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி செய்திகள் பரவுவது குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்து உள்ளது.
3. சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு
9 நீதிபதிகளுக்கும் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது .
4. சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட புதிதாக 9 நீதிபதிகள் நியமனம் மத்திய அரசு ஒப்புதல்
சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
5. சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு 3 பெண் நீதிபதிகள் பரிந்துரை தகவல் - தலைமை நீதிபதி வருத்தம்
நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறை புனிதமானது மற்றும் அதனுடன் குறிப்பிட்ட கண்ணியம் உள்ளது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி ரமணா வருத்தம்