மராட்டியத்தில் 18 மாநகராட்சிகளில் வார்டு மறுசீரமைப்பு பணியை தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவு


மராட்டியத்தில் 18 மாநகராட்சிகளில் வார்டு மறுசீரமைப்பு பணியை தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 25 Aug 2021 11:34 PM GMT (Updated: 25 Aug 2021 11:34 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் தேர்தலுக்கு தயாராகி வரும் 18 மாநகராட்சிகளில் வார்டு மறுசீரமைப்பு பணியை தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பை, தானே, உல்லாஸ்நகர், பிவண்டி-நிஜாம்பூர், பன்வெல், மிரா பயந்தர், புனே, பிம்ப்ரி சிஞ்ச்வாட், நாசிக் உள்ளிட்ட 18 மாநகராட்சிகளின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு முடிவடைகிறது. இதையடுத்து இந்த மாநகராட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்தநிலையில் மேற்கண்ட 18 மாநகராட்சி கமிஷனர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் 27-ந் தேதி(நாளை) முதல் வார்டுகள் மறுசீரமைப்பு பணியை தொடங்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் ஒற்றை உறுப்பினர் வார்டு முறைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும் வலியுறுத்தி உள்ளது.

அதேபோல 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, வார்டின் புவியியல் காரணிகளால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கோர்ட்டின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வார்டுகள் உருவாக்கப்பட வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story