கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 3.3 கிலோ தங்கம் பறிமுதல்


கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 3.3 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Aug 2021 2:28 AM GMT (Updated: 26 Aug 2021 2:28 AM GMT)

கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.352 கிலோ எடை கொண்ட தங்கம் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.




கொச்சி,

கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் சுங்க இலாகாவின் உளவு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.  இதில் துபாயில் இருந்து வந்த 2 பேர் மற்றும் ஷார்ஜாவில் இருந்து வந்த ஒருவர் என 3 பேர் தங்க கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேரளாவுக்கு வந்த ஒரு பயணி, 1,600 சிகரெட்டுகள் மற்றும் முகத்துக்கு பூசும் கிரீம், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட வர்த்தக பொருட்களை கடத்தி வந்துள்ளார்.

இதேபோன்று, துபாயில் இருந்து வந்த ஒரு பயணியிடம் இருந்து 1,573 கிராம் தங்கமும், மற்றொரு பயணியிடம் இருந்து 162 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உளளது.

இதுதவிர, ஷார்ஜாவில் இருந்து வந்த மற்றொரு பயணி தனது காலணி உறையில் 1,595 கிராம் தங்கம் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story