நாட்டில் இதுவரை வழங்கிய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் 58.76 கோடி


நாட்டில் இதுவரை வழங்கிய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் 58.76 கோடி
x
தினத்தந்தி 26 Aug 2021 6:56 AM GMT (Updated: 26 Aug 2021 6:56 AM GMT)

நாட்டில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 58.76 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.




புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.  இதில், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.  இதன்பின்பு 18 வயது கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அரசு அனுமதி வழங்கியது.

இந்த பணியானது கடந்த ஜூன் 21ந்தேதி முதல் தொடங்கியது.  இந்த நிலையில், நாட்டில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 58.76 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இன்னும் 1 கோடியே 3 லட்சத்து 39 ஆயிரத்து 970 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட உள்ளன.  இதுதவிர, 3 கோடியே 77 லட்சத்து 9 ஆயிரத்து 391 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இன்னும் பயன்படுத்தப்படாமல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story