கேரளாவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; மத்திய அரசு எச்சரிக்கை


Image courtesy :thenewsminute.com
x
Image courtesy :thenewsminute.com
தினத்தந்தி 26 Aug 2021 9:52 AM GMT (Updated: 26 Aug 2021 9:52 AM GMT)

ஓணம் பண்டிகைக்காக அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் காணரமாக கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

திருவனந்தபுரம்

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று 37,593 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது. 

ஓணம் பண்டிகைக்காக அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,445 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக பாதிப்பு விகிதம் 30 சதவீதத்தை நெருங்கியுள்ளது. அதே போல 215 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு விகிதமானது 19.03 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது வரை 38,83,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,972 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 4,048 பேரும் அதனை தொடர்ந்து திருச்சூரில் 3,865 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஓணம் பண்டிகைக்காக அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும், அடுத்த 7-10 நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் மாநில சுகாதார மந்திரி வீணா வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

அனைவரும் தாமாக பரிசோதனைக்கு முன்வரவேண்டும். கொரோனா பாதிப்பு ஆரம்பத்திலே கண்டறியப்பட்டால் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க முடியும்' என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ். வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவின் நிலைமையை சுட்டிக்காட்டி, எதிர்வரும் பண்டிகை நாட்களில் மற்ற மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல, “கேரள மக்களின் உயிரை காப்பதில் மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தோல்வியடைந்துள்ளார்.” என்று மத்திய மந்திரி முரளிதரன் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story