மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 169 புள்ளிகள் சரிவு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 169 புள்ளிகள் சரிவு
x
தினத்தந்தி 27 Aug 2021 4:57 AM GMT (Updated: 27 Aug 2021 4:57 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 169 புள்ளிகள் சரிவடைந்து 55,779 புள்ளிகளாக உள்ளது.



மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 169 புள்ளிகள் சரிவடைந்து 55,779 புள்ளிகளாக உள்ளது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,609 புள்ளிகளாக உள்ளது.

இவற்றில், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஐ.டி.சி. உள்ளிட்டவற்றின் பங்குகள் லாப நோக்கத்துடன் காணப்படுகின்றன.  ஐ.சி.ஐ.சி.ஐ., இன்டஸ்இன்ட் ஆகிய வங்கிகள் மற்றும் இன்போசிஸ் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகள் நஷ்டத்தில் உள்ளன.

கொரோனா 2வது அலையின் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருவது பங்கு சந்தையில் எதிரொலிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Next Story