தேசிய செய்திகள்

பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்?: ராகுல் காந்தி கேள்வி + "||" + BJP’s income rose by 50%. And yours?

பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்?: ராகுல் காந்தி கேள்வி

பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது; மக்களின் வருமானம்?: ராகுல் காந்தி கேள்வி
பாஜகவின் வருமானம் 50% அதிகரித்துள்ளது. ஆனால் உங்களின் வருமானம்? என ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் மக்களுடைய வருமானம் உயரவில்லையே என்று காங்கிரஸ் எம்.பி  ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் கொள்கை மற்றும் திட்டங்களை விமர்சித்து காங்கிரஸ்  எம்.பி ராகுல் காந்தி அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.  

அந்த வகையில், ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- 2019-20 தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50 சதவீகிதம் உயர்ந்துள்ளதுடன், மொத்தம் ரூ.3,623,28 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், கட்சியின் வருமானம் உயர்ந்தாலும், மக்களின் வருமானம் உயரவில்லையே” எனப்பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் வாக்குறுதியை பாஜக மறந்துவிட்டது: அகிலேஷ் யாதவ் விமர்சனம்
உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் வர இருப்பதால் விவசாய சட்டங்களை பாஜக திரும்பப் பெறக்கூடும் என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
2. உத்தரகாண்டில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது: ராகுல் காந்தி
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்-நிலச்சரிவால் 34-பேர் பலியாகி உள்ளனர்.
3. பாபுல் சுப்ரியோ தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
மத்திய மந்திரி பொறுப்பு பறிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த பாபுல் சுப்ரியோ, பாஜகவில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
4. லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும்; ராகுல் காந்தி டுவிட்
லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. உத்தர பிரதேச விவசாயிகள் போராட்ட வன்முறை; ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் முடிவு
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர்.