ஜாலிபன் வாலாபாக் நினைவிடத்தை காணொலியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி


ஜாலிபன் வாலாபாக் நினைவிடத்தை காணொலியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
x

ஜாலிபன் வாலாபாக் நினைவிடத்தை காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் புதுப்பிக்கப்பட்ட ஜாலிபன் வாலாபாக் நினைவிடத்தை காணொலியில் திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

சர்தார் உதம்சிங், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களுக்கு உயிரைத்தியாகம் செய்ய தைரியம் அளித்தது. அமைதியான போராட்டம் குறித்த நினைவூட்டலாக ஜாலிபன் வாலாபாக் இருக்க வேண்டும். 

சுதந்திரப் போராட்டத்தில் நமது பழங்குடி சமூகத்தினர் பெரும் பங்கு ஆற்றினர், ஆனால் அவர்களின் தியாகங்கள் வரலாற்று புத்தகங்களில்  சரிவர  குறிப்பிடப்படவில்லை.  

நாட்டின் 9 மாநிலங்களில் ஆதிவாசி சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை காட்சிப்படுத்தும் விதமாக அருங்காட்சியகங்களில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  

உத்தர பிரதேசம் அலகாபாத்தில் இந்தியாவின் முதல் ஊடாடும் அருங்காட்சியகம் கட்டப்படுகிறது என்றார்.

Next Story