மராட்டியத்தில் இன்று 4,666-பேருக்கு கொரோனா - 131 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் இன்று 4,666-பேருக்கு கொரோனா - 131 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 29 Aug 2021 4:22 PM GMT (Updated: 29 Aug 2021 4:22 PM GMT)

மராட்டியத்தில் இன்று 4,666- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் இன்று 4,666- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 131 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,510- பேர் தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்துள்ளனர். மராட்டியத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 56 ஆயிரத்து 939- ஆகவும் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 157- ஆகவும் உயர்ந்துள்ளது. 

மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 52,844- ஆக உள்ளது. மராட்டியத்தில்  இன்று  தொற்று பாதிப்பைக் கண்டறிய 2 லட்சத்து 03 ஆயிரத்து 210- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மராட்டியத்தில் கொரோனா மீட்பு விகிதம் 97 சதவிகிதமாகவும் உயிரிழப்பு விகிதம் 2.12 சதவிகிதம் ஆகவும் உள்ளது. மும்பையில் இன்று 345- பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story