பாரா ஒலிம்பிக்: தங்கம் வென்ற அவனி லெகாரவுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு


பாரா ஒலிம்பிக்: தங்கம் வென்ற  அவனி லெகாரவுக்கு  பரிசுத்தொகை அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2021 9:02 AM GMT (Updated: 30 Aug 2021 9:02 AM GMT)

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ராஜஸ்தானை சேர்ந்த வீர‌ர்களுக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் பரிசுத்தொகை அறிவித்தார்

ஜெய்பூர், 

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த அவனி லெகாரவுக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் போட்டியில் 249.6 புள்ளிகளுடன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது அவனி லெகாரா. இதன்மூலம் பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார்.

இதையடுத்து பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாரவுக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் வெள்ளி வென்ற தேவேந்திராவுக்கு ரூ. 2 கோடியும் வெண்கலம் வென்ற சுந்தர் சிங்குக்கு ரூ. 1 கோடியும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.


Next Story