அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 25-வது பிரிவுகளையும் விற்று விட்டீர்களா? - ராகுல்காந்தி கேள்வி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 Aug 2021 11:51 PM GMT (Updated: 30 Aug 2021 11:51 PM GMT)

பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, அரசியல் சட்ட பிரிவுகளும் விற்கப்பட்டு விட்டதா என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் 2 வீடியோக்களை வெளியிட்டார். மத்தியபிரதேசத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் லாரியில் கட்டி இழுத்து செல்லப்படுவதும், ‘ஜெய்ஸ்ரீராம்’ என சொல்லச்சொல்லி ஒருவர் தாக்கப்படுவதும் அந்த வீடியோக்களில் இருந்தன.

அந்த பதிவில், ‘‘அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 25-வது பிரிவுகளையும் விற்று விட்டீர்களா?’’ என்று ராகுல்காந்தி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவு, அனைவருக்கும் பாகுபாடு இல்லாத வாழ்க்கையை உறுதி செய்கிறது. ஆனால், மோடி பிரதமரானதில் இருந்து இந்த உத்தரவாதம் பறிபோய் விட்டது.

பிரித்தாளும் கொள்கை அடிப்படையில் நடத்தப்படும் கட்சி, மத சுதந்திரமும், நல்லிணக்கமும் நாட்டின் பலம் என்பதை புரிந்து கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story