தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு + "||" + Nine judges take oath as Supreme Court judges

சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு

சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு
9 நீதிபதிகளுக்கும் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது .
புதுடெல்லி: 

சுப்ரீம் கோர்ட்டில்  நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

உச்ச நீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாதத்தில் அடுத்தடுத்து மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமனும், நவீன் சின்காவும் ஓய்வு பெற்றதால், 26 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டுக்கு  புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிசியம் கடந்த 17ம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது.

சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்கு தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்னா, குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி பேலா திரிவேதி, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அபய் ஓகா, குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விக்ரம்நாத், சிக்கிம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, கேரள ஐகோர்ட்டு நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் பி.வி.நரசிம்மா ஆகியோரது பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜீயம் பரிந்துரைத்து.

இந்த பட்டியலை ஏற்ற  மத்திய சட்ட அமைச்சகம், இதற்கு ஒப்புதல் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரையை முழுமையாக ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 9 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த 9 நீதிபதிகளுக்கும் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது . 9 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
சுப்ரீம் கோர்ட்  வரலாற்றிலேயே ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்த நியமனத்தின் மூலம், சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான பி.வி.நாகரத்தனா, பணி மூப்பு அடிப்படையில் வரும் 2027ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின்  தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம், நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.

தொடர்புடைய செய்திகள்

1. பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளையின் கோரிக்கை நிராகரிப்பு - சுப்ரீம் கோர்ட்டு
வகாரத்தில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
2. சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி செய்திகள் -சுப்ரீம் கோர்ட் கவலை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி செய்திகள் பரவுவது குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்து உள்ளது.
3. சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட புதிதாக 9 நீதிபதிகள் நியமனம் மத்திய அரசு ஒப்புதல்
சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
4. எம்.பியால் பாலியால் பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியான அதுல் ராய் மீது இளம்பெண் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசாரிடம் சரண் அடைந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
5. சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு 3 பெண் நீதிபதிகள் பரிந்துரை தகவல் - தலைமை நீதிபதி வருத்தம்
நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறை புனிதமானது மற்றும் அதனுடன் குறிப்பிட்ட கண்ணியம் உள்ளது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி ரமணா வருத்தம்