தேசிய செய்திகள்

பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி + "||" + At least 43 people have died in the floods in Bihar

பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி

பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளத்தால் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அம்மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் இன்று நேரில் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பீகார் சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழா - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு..!
பீகார் மாநில சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
2. 6-ம் வகுப்பு மாணவன் வங்கி கணக்கில் ரூ.905 கோடி கையிருப்பு? - அதிகாரிகள் விளக்கம்
பீகாரில் 6-ம் வகுப்பு மாணவன் வங்கி கணக்கில் 905 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக வெளியான தகவல் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
3. பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. பீகாரில் 11 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல்
பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் 11 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
5. பீகார், ஜம்முவில் 2 பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்; தாக்குதல் சதி முறியடிப்பு
பீகாரை சேர்ந்த முகமது அர்மான் அலி (வயது 20), முகமது இஷானுல்லா (23) ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான லஷ்கர்-இ-முஸ்தபா அமைப்பில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.