தேசிய செய்திகள்

பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி + "||" + At least 43 people have died in the floods in Bihar

பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி

பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளத்தால் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அம்மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் இன்று நேரில் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி
பீகாரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
2. பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு- மொத்த பலி எண்ணிக்கை 40- ஆக உயர்வு
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 40- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. பீகார்: கள்ளச்சாராய விருந்து - 5 பேர் உயிரிழப்பு
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. பீகார் குண்டு வெடிப்பு வழக்கு: 9 பேர் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ. கோர்ட்டு தீர்ப்பு
பீகாரில் 2013-ம் ஆண்டு மோடி பொதுக்கூட்ட மைதானத்தில் குண்டு வெடித்த வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
5. பீகார் சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழா - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு..!
பீகார் மாநில சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.