5-18 வயது பிரிவினரிடம் சோதனை...! பயாலஜிகல்-இ தடுப்பூசிக்கு அனுமதி


5-18 வயது பிரிவினரிடம் சோதனை...! பயாலஜிகல்-இ தடுப்பூசிக்கு அனுமதி
x
தினத்தந்தி 2 Sep 2021 5:34 AM GMT (Updated: 2 Sep 2021 5:34 AM GMT)

நிபந்தனைகளுடன் இரண்டு மற்றும் 3ம் கட்ட தடுப்பூசி சோதனையை நடத்த பயாலஜிகல்-இ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ஐதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.

5 முதல் 18 வயது பிரிவினரிடம் சில  நிபந்தனைகளுடன்  இரண்டு  மற்றும் 3ம் கட்ட தடுப்பூசி சோதனையை நடத்த பயாலஜிகல்-இ நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பயாலஜிகல்- இ நிறுவனத்தால் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரான கோர்பிவாக்ஸ் (Corbevax) தடுப்பூசியை சோதித்து பார்க்கலாம் என்ற தடுப்பூசி நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனை பத்து இடங்களில் நடத்தப்படும்.

ஆர்பிடி  புரோட்டீன் அடிப்படையிலான இந்த தடுப்பூசியின் இரண்டு மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகள் தற்போது பெரியவர்களிடம் நடத்தப்பட்டு வருகிறது.

இது செலுத்தப்படும் போது கொரோனா ஸ்பைக் புரோட்டீனை உற்பத்தி செய்து, உடலில் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். இந்த தடுப்பூசியை 3 டோஸ்கள் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சைடஸ் கடிலாவின்- வின் ஊசி இல்லாத கொரோனா தடுப்பூசி சைகோவ்-டி (ZyCoV-D) ஏற்கனவே 12-18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அவசர பயன்பாட்டு அங்கீகாரம்பெற்றுள்ளது.இது அக்டோபர் முதல் வாரத்திலிருந்து தொடங்கப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசியின் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின்  2 & 3 வது கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன, அதன் முடிவு செப்டம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது. 30 கோடி தடுப்பூசிகளுக்கு உயிரியல் இ நிறுவனத்திற்கு அரசாங்கம் 1500 கோடி ரூபாய் முன்பணம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story