தேசிய செய்திகள்

பாராஒலிம்பிக் போட்டி; வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து + "||" + Paralympic Games; Prime Minister Modi congratulates Praveen Kumar on winning silver

பாராஒலிம்பிக் போட்டி; வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாராஒலிம்பிக் போட்டி; வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ, 

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் விளையாடினார்.

அதில் பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை பிரவீன்குமார் பதிவு செய்தார். கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார் பிரவீன்குமார். பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்.

இந்நிலையில், பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெலியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பாரா ஒலிம்பிக்கில் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது பெருமை அளிக்கிறது. இந்த பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பிற்கு கிடைத்தவை. அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் ”என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

1. பாராஒலிம்பிக் போட்டி: இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளி பதக்கம் வென்றார்!
பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
2. பாராஒலிம்பிக் போட்டி: டேபிள் டென்னிசில் இந்திய வீராங்கனை பவினா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
பாராஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிசில் இந்திய வீராங்கனை பவினா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
3. பாராஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்; தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்துகிறார்
163 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. தொடக்க விழா அணிவகுப்பில் தமிழக வீரர் மாரியப்பன் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.