சென்னை உள்பட 12 ஐகோர்ட்டுகளுக்கு 68 நீதிபதிகள் கொலீஜியம் பரிந்துரை


சென்னை உள்பட 12 ஐகோர்ட்டுகளுக்கு 68 நீதிபதிகள் கொலீஜியம் பரிந்துரை
x
தினத்தந்தி 4 Sep 2021 8:51 AM GMT (Updated: 4 Sep 2021 8:51 AM GMT)

சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களுக்கு 4 வழக்கறிஞர்களை நியமிக்க கொலிஜீயம் பரிந்துரை செய்து உள்ளது.

புதுடெல்லி

இந்திய தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் கொலீஜியம்  12 மாநில ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளாக நியமிக்க 44 வக்கீல்கள் மற்றும் 24 நீதித்துறை அதிகாரிகள் உள்பட 68 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.

ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக  நியமிக்க 10 பெண் வக்கீல்களையும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது

மத்திய அரசு அனுமதி வழங்கியதும் அலகாபாத், ராஜஸ்தான், கொல்கத்தா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், சென்னை, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் அரியானா, கேரளா, சத்தீஸ்கார் மற்றும் அசாம் ஆகிய ஐகோர்ட்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.

சென்னை ஐகோர்ட்டில்  காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களுக்கு 4 வழக்கறிஞர்களை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து உள்ளது.

சுந்தரம் ஸ்ரீமதி, டி.பாரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகம்மது ஷாபிக் என 4 பேரை பரிந்துரைத்து ஜனாதிபதி  ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி  ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், சென்னை ஐகோர்ட்டு  நீதிபதிகளின் எண்ணிக்கை, 60 ஆக உயரும்.

Next Story