கோவிஷீல்டு தடுப்பூசி டோசுகளுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளியால் சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது-மத்திய அரசு


கோவிஷீல்டு தடுப்பூசி டோசுகளுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளியால் சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது-மத்திய அரசு
x
தினத்தந்தி 4 Sep 2021 11:09 AM GMT (Updated: 4 Sep 2021 11:09 AM GMT)

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோசுகளுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி கொடுப்பதால் கொரோனாவுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது என மத்திய அரசு கேரள ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்

84 நாட்கள் ஆவதற்கு  முன்னரே  தங்களது பணியாளர்களுக்கு கோவிஷீல்டின் 2 ஆம் டோசை போட வேண்டும் என  கீடெக்ஸ் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம்  ரிட் மனு தாக்கல் செய்தது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில்,

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோசுகளுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி கொடுப்பதால் கொரோனாவுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது 

 உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்கள், உலகில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஆனால் கட்டண தடுப்பூசிக்கு இந்த கால இடைவெளி பொருந்தாது என்றும், 28 நாட்கள் போதுமானது என கோவிஷீல்டு தயாரிப்பாளரின் வழிகாட்டலில் உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.    

Next Story