ஐகோர்ட்டுகளில் 90 சதவீத காலி பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி


ஐகோர்ட்டுகளில் 90 சதவீத காலி பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
x
தினத்தந்தி 4 Sep 2021 9:03 PM GMT (Updated: 4 Sep 2021 9:03 PM GMT)

ஐகோர்ட்டுகளில் உள்ள 90 சதவீத காலி பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

பாராட்டு விழா
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு இந்திய பார் கவுன்சில் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நிறைவுரை ஆற்றிய என்.வி.ரமணா, நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளாக நியமிக்க 82 பெயர்களை கொலிஜீயம் நேற்று பரிந்துரைத்தது. சுப்ரீம் கோர்ட்டுக்கு சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்ட 9 நீதிபதிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளித்ததுபோல, ஐகோர்ட்டுகளில் உள்ள 90 சதவீத காலி பணியிடங்களை ஒரு மாதத்தில் நிரப்ப விரைந்து ஒப்புதல் அளிக்கப்படும் என்றார்.

சட்டத்துறை மந்திரி
இந்த விழாவில் பேசிய மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும். நீதித்துறைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித்தரும் என தெரிவித்ததுடன், தாமதமாக வழங்கப்படும் நீதி குறித்து கவலை வெளியிட்டார்.

பங்கேற்பு
இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகள், மாநிலங்களின் பார் கவுன்சில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story