சிறுத்தையுடன் நேருக்கு நேர் மோதிய பூனை : வைரலாகும் வீடியோ


சிறுத்தையுடன் நேருக்கு நேர் மோதிய பூனை : வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 6 Sep 2021 11:09 AM GMT (Updated: 6 Sep 2021 11:09 AM GMT)

சிறுத்தையை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்திய பூனையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாசிக்,

மராட்டிய மாநிலம் நாசிக்கில், ஒரு கிணற்றின் அருகே சுற்றித்திரிந்த பூனையைப் பிடிக்க சிறுத்தை முயன்றது. பூனை கிணற்றினுள் சுவரின் விளிம்பிக்குச் சென்று நின்றது. அதைத் விடாமல் துரத்திச் சென்ற சிறுத்தை தவறுதலாகக் கிணற்றுக்குள் விழுந்தது.

 பின், பூனை நின்ற சுவரின் விளிம்புக்கு வந்த சிறுத்தை பூனையைப் லாவகாகமாக பிடிக்க முயன்றது. அப்போது, அந்தப் பூனை சிறுத்தையை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேர் மோதுவதுபோல் நின்றது. 

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது. 

நாசிக் மேற்கு மண்டல துணை வனப் பாதுகாவலர் பங்கஜ் கர்க் கூறுகையில்,

 'பூனையைத் துரத்திய சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது. வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு காட்டுக்குள் விடப்பட்டது என்றார். 

Next Story