தேசிய செய்திகள்

இந்தியாவில் தினமும் 1.25 கோடி கொரோனா தடுப்பூசிகள்; பிரதமர் மோடி பேச்சு + "||" + 1.25 crore corona vaccines daily in India; PM Modi's speech

இந்தியாவில் தினமும் 1.25 கோடி கொரோனா தடுப்பூசிகள்; பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவில் தினமும் 1.25 கோடி கொரோனா தடுப்பூசிகள்; பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவில் தினமும் 1.25 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

இமாசல பிரதேச சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி பயனாளர்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று பேசினார்.  அவர் கூறும்போது, இமாசல பிரதேசம் சாம்பியன் ஆக உருவெடுத்து உள்ளது.

இமாசல பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 100 சதவீதம் அளவுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.  இதேபோன்று, மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கு நபர்களுக்கு 2வது டோஸ் போடப்பட்டு உள்ளது.

அடிப்படை வசதிகளை பெறவே இமாசல பிரதேசம் அதிகம் போராடியது.  ஆனால, இன்று சிறந்த முறையில் செயலாற்றுகிறது.  ஒரு மலை சார்ந்த மாநிலம் என்ற வகையில் போக்குவரத்து, சேமிப்பு என பல தடைகளை சந்தித்தது.

ஆனால், கொரோனா தடுப்பூசி திட்டத்தில் மாநில அரசு திறம்பட கையாண்டு உள்ளது.  இதற்காக அரசுக்கும், அரசு குழுவினருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, இந்தியாவில் நாள்தோறும் 1.25 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன என பேசியுள்ளார்.  இந்த எண்ணிக்கை பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என கூறியுள்ளார்.

சிக்கிம், தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி ஆகியவையும் இந்த இலக்கை எட்டியுள்ளன என்றும் வேறு பல்வேறு மாநிலங்களும் இதனை அடையவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.  நாட்டில் இதுவரை 70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2. மக்களை பற்றி சிந்திக்காத ‘தி.மு.க. அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
மக்களை பற்றி சிந்திக்காத தி.மு.க. அரசுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விழுப்புரம் பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
3. தேர்தல் ஆணையத்தை சீர்த்திருத்த வேண்டிய சூழல் உள்ளது காஞ்சீபுரத்தில் சீமான் பேச்சு
தேர்தல் ஆணையத்தை சீர்த்திருத்த வேண்டிய சூழல் உள்ளது காஞ்சீபுரத்தில் சீமான் பேச்சு.
4. கல்வி பணிக்கான ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படும்; பிரதமர் மோடி பேச்சு
கல்வி பணிக்கான ஒவ்வொரு முயற்சியாலும் நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
5. ‘ஏழை மக்களை கைதூக்கி விடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது’ மு.க.ஸ்டாலின் பேச்சு
‘ஏழை மக்களை கைதூக்கி விடும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது’ என்று மக்களை தேடி மருத்துவ மையம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.