தேசிய செய்திகள்

ஒரே நாளில் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள்; 11 நாட்களில் 3வது முறையாக சாதனை + "||" + 1 crore corona vaccines in a single day; Record for the 3rd time in 11 days in the country

ஒரே நாளில் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள்; 11 நாட்களில் 3வது முறையாக சாதனை

ஒரே நாளில் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள்; 11 நாட்களில் 3வது முறையாக சாதனை
நாட்டில் 11 நாட்களில் 3வது முறையாக ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.


புதுடெல்லி,

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கியது.  இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதன்பின்னர் கடந்த ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டு உள்ளன.  கடந்த 11 நாட்களில் 3வது முறையாக இந்த இலக்கு அடையப்பட்டு உள்ளது.

இதன்படி, இந்தியாவில் இதுவரை 69.68  கோடி (69,68,96,328) கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சந்தைகளில் விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பூசிகள்...!
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
2. யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு 128 கோடி கொரோனா தடுப்பூசிகள்; அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 128 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.