கொரோனா தடுப்பூசி பணியை கால் முறிந்தபோதும் தொடர்ந்த பெண் பணியாளர்; பிரதமர் மோடி பாராட்டு


கொரோனா தடுப்பூசி பணியை கால் முறிந்தபோதும் தொடர்ந்த பெண் பணியாளர்; பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 6 Sep 2021 4:26 PM GMT (Updated: 6 Sep 2021 4:26 PM GMT)

இமாசல பிரதேசத்தில் கால் முறிந்தபோதும் கொரோனா தடுப்பூசி பணியை தொடர்ந்த பெண் பணியாளரை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.


புதுடெல்லி,

இமாசல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் வசித்து வரும் சுகாதார பெண் பணியாளர் கர்மோ தேவி (வயது 52).  இவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது கால் முறிந்துள்ளது.  அந்த நிலையிலும், பணியை தொடர்ந்து 22,500 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளார்.

இந்த தகவல் அறிந்து, பிரதமர் மோடி இமாசல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவரை பாராட்டியுள்ளார்.  இமாசல பிரதேச சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி பயனாளர்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று பேசினார்.  

அதில் பேசிய பிரதமர் மோடி, தடுப்பூசி போட்டு கொள்ளவும் வேண்டும்.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்பதனை நாம் மறந்து விட கூடாது என்று கூறியுள்ளார்.


Next Story