தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி + "||" + Uttar Pradesh: Undeterred by Rapti flood, girl rows boat to reach school daily

உத்தரபிரதேசத்தில் தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி

உத்தரபிரதேசத்தில் தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி
உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவி சந்தியா சாஹினி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்ல தினமும் ஆற்றில் படகை ஓட்டி செல்கிறார்.
உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ராம்பூரில் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் அந்த கிராமத்தில் உள்ள 11-ம் வகுப்பு பள்ளி மாணவி சந்தியா சாஹினி வீட்டில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள தனது பள்ளிக்கு செல்ல தினமும் ஆற்றில் படகை ஓட்டி செல்கிறார். பள்ளிச்சீருடையில் மாணவி படகில் பயணம் செய்யும் காட்சி வைரலாகி அனைவரது பாராட்டுதலை பெற்று உள்ளது.

இது குறித்து சந்தியா சாஹினி கூறியதாவது:-

கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டது. தற்போது வெள்ளத்தின் சவாலை எதிர்கொள்கிறோம். என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் என்னால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது கனமழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. எனது படிப்புக்காக நான் முழுமையாக பள்ளியை நம்பி உள்ளேன். அதனால் நான் படகில் பள்ளியை அடைய முடிவு செய்தேன். என் பகுதியில் உள்ள பல மாணவிகள் பள்ளிக்கு செல்வதில்லை. ஏனென்றால் அவர்கள் வெள்ள நீருக்கு பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு பயப்பட நேரமில்லை. எனது குறிக்கோள் எனது இலக்கை அடைய நான் தினமும் கடினமாக உழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் பஸ்-லாரி மோதல்; 12 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டம், பாபுரி கிராமத்தில் நேற்று ஒரு தனியார் பஸ், லாரியுடன் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
2. உத்தரபிரதேசத்தில் புதிய பல்கலைக்கழகத்துக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
3. உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மாநாடு; மேதா பட்கர் பங்கேற்பு
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மாநாடு நடந்தது. பஸ், டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்தனர். மேதா பட்கரும் பங்கேற்றார்.
4. உத்தரபிரதேசத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு
உத்தரபிரதேசத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
5. உத்தரபிரதேசத்தில் செயல்படாத மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை: ஜே.பி.நட்டா
உத்தரபிரதேசத்தில் செயல்படாத மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்தார்.