தேசிய செய்திகள்

இந்தியா அதிக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளது - வங்காளதேச மந்திரி தகவல் + "||" + India has assured us of vaccine, says Bangladesh minister

இந்தியா அதிக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளது - வங்காளதேச மந்திரி தகவல்

இந்தியா அதிக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளது -  வங்காளதேச மந்திரி தகவல்
இந்தியா எங்களுக்கு அதிக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளது என்று வங்காளதேச மந்திரி ஹசன் மக்முத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் பங்களிப்புடன் பங்கபந்து ஊடக மையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் வங்காள தேசத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி ஹசன் மக்முத் கலந்து கொண்டார். விழா நிறைவில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

இந்திய வங்காளதேச உறவு புதிய உயரத்தை எட்டி உள்ளது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் இந்தியாவுடன் உறுதியான உறவில் உள்ளோம். வங்காளதேசத்தின் தந்தையான முஜிபுர் ரஹ்மான் நினைவாக பங்கபந்து ஊடக மையம் திறக்கப்பட்டு உள்ளது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு வந்துள்ளது. இங்கு நிலைமை சீரடைந்ததும் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்புவதாக இந்தியா உறுதியளித்து உள்ளதும் இருநாடுகளின் நட்புறவை காட்டுகிறது. சீரம் நிறுவனம் மாதம் தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வந்தது. ஆனால் பிப்ரவரியில் 20 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. அதன்பிறகு இங்கு இரண்டாவது அலை உச்சம்பெற்ற பின் இதுவரை தடுப்பூசிகள் அனுப்பப்படவில்லை. இங்கு நிலைமை கட்டுக்குள் வந்ததும் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்புவதாக மோடி உறுதியளித்து உள்ளார்” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-பாகிஸ்தான் டி-20 ஆட்டம்; 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது.
2. “சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டம் நினைவில் இருக்கட்டும்” இந்திய ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் எச்சரிக்கை
20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. அமெரிக்காவில் இதுவரை 41.3 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. இந்தியா உடன் மோதல் போக்கு; எல்லைப் பகுதிகளுக்கு புதிய சட்டத்தை நிறைவேற்றிய சீனா
இந்தியாவுடனான ராணுவ மோதல்களுக்கிடையே சீனா,‘எல்லை நிலப்பகுதிக்கான புதிய சட்டம்’ ஒன்றை உருவாக்கியுள்ளது.
5. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி தேச நலனுக்கு எதிரானது: பாபா ராம்தேவ் பாய்ச்சல்
20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி மோதுவது தேச நலனுக்கு எதிரானது என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.